மரண அறிவித்தல்
அன்னை மடியில்: 13-10-1920 இறைவன் அடியில்: 12-05-2010
திருமதி. தங்கச்சிப்பிள்ளை கந்தையா (வல்வெட்டி)
வல்வெட்டி – நெய்யம்புலத்தைப், பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கச்சிப்பிள்ளை (செல்லம்மா) கந்தையா அவர்கள் மே மாதம் 12 ஆம் திகதி புதன்கிழமையன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலம்சென்ற Dr. தம்பு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வீரசிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு - பார்வதி அவர்களின் அன்பு மருமகளும், கனடாவில் வசிக்கும், கணேசலிங்கம், விஜயலட்சுமி, கணேசராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகிமைலீலா, ஏகாம்பரம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியராசா (இலங்கை), காலம்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலம்சென்றவர்களான அன்னலட்சுமி, பார்வதி, கதிரவேலு, செல்லம்மா (சின்னக்கண்டு),மற்றும் பரமேஸ்வரி (மாம்பழம் -கனடா) ராஜா (இலண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம்சென்றவர்களான கந்தசாமி, பெரியதம்பி, அன்னம்மா, வேல்முருகு, மகேந்திரன் மற்றும் சரஸ்வதி அம்மாள் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், திலாணி, துஷாந்தி, திலக்ஷன், மாதுளா, Dr.தர்மினி, சஞ்ஜயன், தனஞ்செயன், மிதுலா, அகிலா, வேணுஜன், மற்றும் பாலகுமார், புவிக்குமார் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அனிஷ் இன் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக மே மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணி முதல் 9மணி வரை, 3280 Sheppard Avenue East இல் அமைந்திருக்கும் Highland Funeral Home இல் வைக்கப்பட்டு, அதே மண்டபத்தில் மே மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை ஈமக் கிரியைகள் நடைபெற்று, 4510 Yonge Street இல் அமைந்திருக்கும் Forest Lawn Crematoriuam இல் தகனக் கிரியைகள் நடைபெறும்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணேசலிங்கம் 416-332-0386
விஜயலட்சுமி (விஜி) 905-479-0162
கணேசராஜா 905-947-9192
ஏகாம்பரம் 416-557-4345