வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரஞ்சிதமலர் தவராசா அவர்கள் 11-12-2010 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தசாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், தவராசா அவர்களின் அன்புமனைவியும், சுஜாதா(கனடா), சுதன்(லண்டன்), காலஞ்சென்ற சுகந்தன் ஆகியோரின் அன்புத்தாயாரும், நகுலேஸ்வரன், கேமா, கார்த்திகா ஆகியோரின் அன்புமாமியாரும், தேனுகா, திகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தவமலர்(இலங்கை), சிவபாக்கியம்(இந்தியா), காலஞ்சென்ற துரைராசா, மற்றும் சிவராசா(லண்டன்), ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஞானதேவராசா, மற்றும் இந்திராணி, சோதிலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |