Sunday, December 30, 2012

திரு பொன்னுத்துரை சின்னத்தம்பி
(ஓய்வு பெற்ற கிராம சேவகர்)
அன்னை மடியில் : 28 டிசெம்பர் 1938 — இறைவன் அடியில் : 30 டிசெம்பர் 2012
வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னத்தம்பி அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆத்தைப்பிள்ளை(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதையம்மா(வல்வெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம்(கனடா), ரேவதி(கனடா), சோதிரத்தினம், சரஸ்வதி, மகேஸ்வரி, சோதிலிங்கம்(கனடா), ருக்குமணி(சுவிஸ்), அமுதலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, சின்னத்தம்பி, திலகராஜசிங்கம், இன்பராஜா, குணரட்ணம், குசுமாவதி, கிருஷ்ணகோபால், சிவகலை தங்கம்மா காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா, சோதிலிங்கம், கமலாம்பிகை, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதியம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், அமிர்தலிங்கம், நவநீதராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
றூபராணி, மகாலக்ஷ்மி, ரத்தினேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், 
ஜோதிரவி, கிருபாகரன், பிரபாகரன், சுதாகரன், மதிவதனா, பிரபகலா, மிதுனா, ரேணுகா, ருக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வசந்தரூபி, சசிகுமார், ராஜ்குமார், பிரதீப்குமார், பிரஷாந்தி, பிரியதர்சினி, லலித்குமார், சுபாசினி, ருகினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவரஞ்சினி, கவிதா, சன்றா, ஜெயந்தி, கருணாகரன், முகுந்தன், ஜெய், அரவிந்தன், ஜெகநாதன், வதனகீதா, சுவிதா, பாலகிருஷ்ணன், வானதி, கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஸ்வின், அபிலாஷ், மிதுன், மாதுரி, அக்ஸ்யன், அபிசா, கிஷானா, நிலா, அவினாஸ், சோதியா, விதுஷா, உமையாள், யனுக், நயோமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சி. பூங்கோதையம்மா — இலங்கை
தொலைபேசி:+94212263518
பொ. சுப்பிரமணியம் — கனடா
செல்லிடப்பேசி:+16134001936
சி. தங்கா — கனடா
தொலைபேசி:+14167519513
கி. ருக்குமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41323811301
பொ. அமுதலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442035663168

Monday, December 24, 2012

திரு கந்தையா துரைசிங்கம்
அன்னை மடியில் : 13 யூலை 1915 — ஆண்டவன் அடியில் : 22 டிசெம்பர் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கந்தையா துரைசிங்கம் அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னக்குட்டி தம்பதிகளின் கடைசி மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னம்மா,மாணிக்கம், சீனித்தம்பி, சின்னத்துரை, இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கலைவரதநாதன்(பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாதரா(லண்டன்), லலிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவராஜா, குணரட்ணம், மனோகரன், றதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசி, ரம்மியா, துகிதாஷ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்ஜா, ஜசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 29/12/2012, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 30/12/2012, 09:00 மு.ப — 11:30 மு.ப

1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada(ஈமைக்கிரியைகள் பிறகு தகனம் செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
ஈஸ்வரநாதன் - மகன் — கனடா
தொலைபேசி:+14162691573
பாஸ்கராதேவி - மகள் — கனடா
தொலைபேசி:+14162652236
சாரதா - மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442031146087
லலிதா - மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442084227587

Saturday, December 15, 2012

திருமதி மனோன்மணி ராசா
அன்னை மடியில் : 2 நவம்பர் 1925 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2012
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய மனோன்மணி ராசா அவர்கள் 13-12-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசந்திரன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திராதேவி, கமலாதேவி, மனேகரதாஸ், விமலாம்பாள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தம்பையா அவர்களின் அன்புச் சகோதரியும்,சகுந்தலாதேவி, வைத்தியநாதன், மகேந்திரன், வல்லிபுரம், ராசலக்சுமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மாதுரி, ஜெனித்தா, சுபாஸ்கரன் யாழினி, சுபாஜினி, நிருபன், ரஜிகரன், மனோஜா, ரசோஜினி ஜீவகுமார், கீர்த்தனா, சுபாஸ்கரன், டயானி, பவித்திரன், ரம்யா, மிதுரை ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆரதி, ராகவி, சாரங்கி, சுவேதா, சங்கவி, அஜித், அனுஸ்ரீ, அபிஷா, நிவிஷா, சந்தியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/12/2012, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
மணி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33149980438
கமலா(மகள்) — கனடா
தொலைபேசி:+19052395090
ரஞ்சன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16472848494
விமலா(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+414445144228

Tuesday, December 11, 2012

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த்தேசியப் பணியினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்ததிரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களை நாம் இழந்து விட்டோம்.
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மிக நீண்டகாலமாக அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவந்த போதிலும் தனது தாய்மண் மீதான தீராப்பற்றின் காரணமாக 2002ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலைப் பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராத ஒரு தேசப் பணியாளனாகத் திகழ்ந்தார்.

கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் நன்குணர்ந்தவர். தாயகத்தில் இளந்தலைமுறையினரை அறிவுமிக்க நாட்டின் சிற்பிகளாக உருவாக்குமாறு தேசம் அவரிடம் கேட்டதற்கமைய அப்பணியினை ஏற்றுப் புதிய அணுகுமுறையுடன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் நல்ல விளையாட்டு வீரனும் ஆவார். அதனால் வெறும் வகுப்பறைப் போதனை முறைகளை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாது விளையாட்டுத்திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தார். அத்தோடு தேசத்திற்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் புலம்பெயர் விடுதலைத் தளத்திலும் தனக்கான அரசியற் கடமைகளை ஒரு கணமும் பின்னிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர் எம்மை விட்டுச்சென்றுள்ளார். திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவு தேசியப் பணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும்அவுஸ்திரேலியா வாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த்தேசியப் பணியில் அயராது உழைத்து வந்த திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமைகொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

 ******************************************************************************************************************************************************************************************

நாட்டுப்பற்றாளர் திரு முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி

திரு. முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வந்தாலும், தன் இனம், மண் மீதான அளவுகடந்த பற்று அவரைவிட்டு விலகவில்லை. இதன் வெளிப்பாடே புலத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தன் இனத்தின் விடுதலைக்காக அவரை இறுதிவரை சோர்வின்றி அயராது உழைக்கத்தூண்டியது.
நாட்டுப்பற்றாளர் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வல்வெட்டியில் 1939 ஆவணி மாதம் 02ஆம் நாள் பிறந்து ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றார். தனது மாணவப் பருவத்தில் ஒரு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் உயரம் பாய்தல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் பல பதக்கங்களை வென்று, இலங்கை அணிக்காக கைப்பந்தாட்டமும்  விளையாடியவர்.  கணிதத் துறையில் பட்டம் பெற்ற திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஹொரண மத்திய கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக நையீரிய நாட்டின் பாடசாலை ஒன்றில் அதிபராகப் பொறுப்பேற்று எழுபதுகளில் புலம்பெயர்ந்தார். அதன் பின்னர் 1985ல் தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே தமிழீழ விடுதலைக்காகவும் தமிழரின் விடிவிற்காகவும் பொருளியல் உதவிகளைப் புரிந்து வந்த இவர் தென்னாபிரிக்காவில் இருந்தும் தன்னால் இயன்ற உதவிகளை இடைவிடாது செய்து வந்தார்.

1989ஆம் ஆண்டு குடியுரிமை பெற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த இவர் அங்கு தேசிய அளவில் புகழ் பெற்ற போல்க்கம் ஹில்ஸ் (Baulkham Hills High School) உயர்தரப்பாடசாலையில் கணித ஆசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். திரு கிருஸ்ணமூர்த்தியின் கற்பித்தல் முறை மாணவர்களால் மட்டுமன்றி சக ஆசிரியர்களாலும் போற்றப்பட்டது.

2002ல் கொண்டு வரப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வன்னி சென்ற நாட்டுப்பற்றாளர்  கிருஸ்ணமூர்த்தி அவர்கள், அங்கு புதிய அணுகுமுறையுடன் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். வெறும் வகுப்பறைப் போதனா முறைகளை மட்டும் பயன்படுத்தாது விளையாட்டுத் திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவரது கற்பித்தல் அமைந்திருந்தது.

தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருவதால் அந்தந்த நாடுகளிலுள்ள அரசுகளுக்கும் மக்களுக்கும் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வையும் தமிழ் மக்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் இப் புலம் பெயர்வாழ் மக்களால் எடுத்துக்கூற முடியும் ஆனால் தமிழர்களே இல்லாத சில நாடுகள் உட்பட அமெரிக்கா ஆபிரிக்கா தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து எமது போராட்டம் பற்றி இராஜதந்திர ரீதியில் 2008 வரையில் முழுநேரமாக முன்னின்று செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி.


திரு கிருஸ்ணமூர்த்தி என்றால் அது இவரைத் தெரிந்த எல்லோர் மனத்திரையிலும் ஓர் அகராதி போன்று பொருள் படுவது மாஸ்ரர். மாஸ்ரர் மாஸ்ரர் என்று சொல்லி இவரைச் சுற்றி நாள்முழுதும் வட்டமடிக்கும் மாணவர்கள், நண்பர்கள் என எவரையுமே பின் வாங்க வைத்தவரல்ல. தனது அன்பாலும் அறிவாலும் அரவணைக்கும் இவரது மென்மையான பண்பு எவரையுமே எளிதில் இவரது பக்கம் ஈர்த்துவிடும். எந்த ஒரு கஸ்டமான காரியத்தையும் இலகுவாகச் செய்யும்படியான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்து தற்துணிவிற்கு அடித்தளமிடுவதிலும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் விளங்கினார்.

செயலுக்கே முக்கியத்துவம் கொடுத்த திரு கிருஸ்ணமூர்த்தியின் நாட்டிற்கான செயற்பாடுகளோ அல்லது உழைப்பு பற்றியோ அவரது குடும்பத்தினருக்கோ அல்ல நண்பர்களுக்கோ அதிகம் தெரியாது. இந்த நிலையில் இவரைக் கொடிய நோய் தாக்கினாலும்கூட இறுதிமூச்சு வரை தமிழீழக் கனவுடனே உயிர் பிரிந்தார். இப்படியான ஒரு இனிமையான, நேர்மையுள்ள மனிதரின் இழப்பானது எமது விடுதலைப் பாதையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியதோடு இவரது குடும்பத்தினர்க்குப் பேரிழப்பையும் ஏற்றடுத்தியுள்ளது.

நாட்டுப்பற்றாளர் முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'