
|
வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவிலடியைப்
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் துரைச்சாமி அவர்கள்
01-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், சற்குணம்(கனடா), அன்னலிங்கம்(கனடா), பத்மினி(இலங்கை), அஞ்சுதமலர்(கனடா),
தங்கேஸ்வரன்(இலங்கை), நிர்மலாதேவி(ஜேர்மனி), விஜயலட்சுமி(இலங்கை),
காலஞ்சென்ற கங்கரலிங்கம்(கனடா), சியாமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு
தாயாரும், பரிமளா, மிலளேஸ்வரி, காலஞ்சென்ற தங்கவடிவேல், காலஞ்சென்ற சத்தியசீலன்,
சந்திரராசா, வனஜா, லோகநாதன், ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30
மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று வல்வெட்டி ஊறணி இந்து மயானத்தில்
பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல்மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் |
|
|