சுவிஸ் Bern(Loryplatz) ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மிதுசா தவராசா அவர்கள் 16-02-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வராசா குனேஸ்வரி, கேசவன், சிரோன்மணி தம்பதிகளின் அன்பு பேத்தியும், தவராசா(வல்வெட்டி) நாகபூசணி(தின்னைவேலி) தம்பியினரின் அன்பு மகளும், தேனுகா அவர்களின் அன்பு அக்காவும், மகேந்திரன்(சுவிஸ்), மனேகரன்(சுவிஸ்), ரமணி, ஜெயராணி, விமலராசா(கனடா), நவரஞ்சினி ஆகியோரின் அன்பு மருமகளும், ரவிந்திரன்(இலங்கை), செல்லம்மா, முருகதாஸ்(சுவிஸ்), தாரணி, பகீதரன்(கனடா), குமுதினி ஆகியோரின் அன்பு பெறாமகளும், றக்சன்(சுவிஸ்), ரத்திகா, விதுஜன்(கனடா), விஷ்ணுகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், கவிப்பிரியன்(சுவிஸ்), சதுர்த்திகா, பிரேமிகா, திருமாறன்(கனடா), தினேஜன், திவாகர், அமிலா, லக்சிகா(இலங்கை), சங்கவி, யதுசன், கவி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |