Monday, February 21, 2011

திரு வல்லிபுரம் கந்தசாமி
(வட்டத்துக்கடை உரிமையாளர், அல்வாய் - யாழ்ப்பாணம்)
மலர்வு : 8 பெப்ரவரி 1919 — உதிர்வு : 19 பெப்ரவரி 2011

யாழ்ப்பாணம் அல்வாயை பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி அவர்கள் 19-02-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் முத்தாச்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், தம்பையா தெய்வானைப்பிள்ளை(வல்வெட்டி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவகுரு, இரத்தினம், அன்னப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசபாபதி(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், வல்லிபுரம்(கனடா), கமலாவதி(கனடா), சரோஜாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கந்தவனம், இலட்சுமிப்பிள்ளை, மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எலிசபெத்(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), கமலா(கனடா), இராமநாதன்(கனடா), சின்னத்தம்பி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருபாளினி சிவமூர்த்தி, ரகுநாத், காலஞ்சென்ற ரஞ்சினி மற்றும் நந்தினி துஷ்யந்தன், ஜெயந்தினி, செந்தில்குமரன், சந்திரகாசன், தர்மினி, கீர்த்தனா, சுபாஸ்கரன், டயானி, தர்சினி இளங்கீரன், கஜேந்தினி, சர்மினி, தனுஷ், தமீன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபராஜிதன், நிவேதிதன், சரண்யா, ஜெலக்ஷன், ஜெனீசா, நவீன் ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 23/02/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Road, Richmond Hill
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 24/02/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
தொடர்புகளுக்கு
வல்லிபுரம்(மகன்) — கனடா
தொலைபேசி:+19052395090
கமலாவதி இராமநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162429822
சாரதா சின்னத்தம்பி(மகள்) — கனடா
தொலைபேசி:+14162862137